கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

3 months ago


கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விமான பயணங்கள் தாமதமாவது மற்றும் பயண பொதிகள் சேதமடைதல் ஆகியன தொடர்பில் பயணிகள் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு சாதக தீர்ப்பு வழங்கியுள்ளது.

சில விமான சேவை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கனடிய விமான பயணிகளின் உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சில விமான சேவை நிறுவனங்கள் மேன்முறையீடு செய்திருந்தன.

எயார் கனடா, போர்ட்டர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட மேலும் 16 சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த மேல்முறையீட்டை செய்திருந்தன.

இறுதி நேரத்தில் ரத்து செய்யப்படும் விமான பயணங்களின் போதும், பயண பொதிகள் காணாமல் போகும் சந்தர்ப்பங்களிலும் பயணிகளுக்கு கூடுதல் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக விமான நிறுவனங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதன்படி இறுதி நேரத்தில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது விமான பயண பொதிகள் காணாமல் போனாலும் கூடுதல் நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றின் இந்த தீர்ப்பு கனடிய விமான பயணிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

விமான பயணிகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கனடிய போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கனடிய விமான சேவை நிறுவன ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

அண்மைய பதிவுகள்