மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் விசாரிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்தினம் முன்னிலையாகி இருந்தார்.
இதன்படி, அவர் நேற்று முன்தினம் முற்பகல் 9.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஏலவே, இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் அங்கு முன்னிலையாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக யோசித ராஜபக்ஷவையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
