ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
4 months ago
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் போராளிகள் தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இதனால் தமது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே எனவும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.