சமூக ஊடகங்களில் 800இற்கும் மேற்பட்ட இடுகைகளை உடன் நீக்குமாறு தேர்தல் ஆணையகம் பணிப்பு!
ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்ட இடுகைகளை நீக்குமாறு தேர்தல் ஆணையகம் கோரியுள்ளது.
இந்த விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணைக்குப் பின்னர் மெட்டா, யூரியூப், ரிக்ரொக் மற்றும் கூகுள் போன்ற தளங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட முறைப் பாடுகளில், 121 இணைப்புகள் சமூக ஊடகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் 116 இணைப்புகள் தளங்களால் அகற்றப்படவில்லை. ஏனெனில் அவை சமூக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்று கூறப்படுகிறது.
500 மேலதிக இணைப்புகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.