வவுனியாவில் சிறீ சபாரத்தினத்தின் 72 ஆவது பிறந்ததின அஞ்சலி நிகழ்வு.

4 months ago


தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) நிறுவுநர் தலைவர் தமிழீழ விடுதலை இயக்கத் தின் (ரெலோ) நிறுவுநர் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 72ஆவது பிறந்த தினமான நேற்று புதன்கிழமை வவுனியா மணிக்கூட்டு கோபுரம் அருகே யுள்ள அவரின் சிலை அருகே அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளு மன்ற உறுப்பினர் வினோநோக ராதலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப கட்டப் போராளிகளில் ஒருவ ரான சிறீ சபராத்தினம் 1952 ஓகஸ்ட் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் பிறந்தவர். தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) நிறுவியவர் இவரே. விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட சகோதர மோதலால் 1986 மே 6ஆம் திகதி இவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று புதன்கிழமை வவுனியா மணிக்கூட்டு கோபுரம் அருகேயுள்ள அவரின் சிலை அருகே அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட் டது.

இந்த நிகழ்வில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளு மன்ற உறுப்பினர் வினோநோக ராதலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.