யாழ் போதையில். திட்டமிட்ட செயல்

7 months ago

2009 இற்கு முன்னைய காலப் பகுதி சமூகத்தை சீரழிக்கும் எந்த தீய செயற்பாடுகளும் இடம்பெற்றதில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் பாதுகாப்பாக இருந்தது. இன்று தமிழ் சமூகத்தை சீரழிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனை திட்டமிட்டே செய்வதாக எண்ணத்தோன்றுகிறது.

ஜஸ் போதைப் பொருள் உற்பத்தியில் யாழ்ப்பாணம்

ஜஸ் போதைப் பொருள் பாவனையில் இருந்த யாழ்ப்பாணம் ஜஸ் போதைப் பொருள் உற்பத்தியிலும் இறங்கியுள்ளது. ஜஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட நிலையில் இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜஸ் போதையால் பலர் இறந்த சம்பவமும் பதிவாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.இணுவில் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட இடமொன்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் யாழ்.மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஜஸ் போதைப் பொருளுடன் இரு மாணவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த ஜஸ் போதை தமக்கு கிடைக்கப்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்தே அந்த வீடு பொலிஸாரால் முற்றுகைக்கு உட்பட்ட போது அங்கு ஜஸ் போதைப் பொருள் உற்பத்தி இடம்பெற்றுள்ளதை கண்டுள்ளனர். ஜஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட இரசாயனங்கள் மற்றும் ஆய்வு கூடப் பொருள்கள் என்பனவும் இதன் மூலம் மீட்கப்பட்டுள்ளன.

அந்த வீட்டில் இருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரையும் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர்களாக தம்பதியினர் தலைமறைவு

ஜஸ் உற்பத்தி இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டில் கைதான நபர் சந்தேகத்துக்குரிய அறையை பிறிதொருவரே பயன்படுத்தி வந்தார் என்றும், அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிகின்றார் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனவே தாதியான அந்தப் பெண் இந்த சட்டவிரோத செயல்களுக்காக ஆய்வு கூட சாதனங்களை வழங்கினாரா, என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். ஜஸ் போதைப் பொருளை பயன்படுத்திய, கையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸார் இன்று ஜஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

பிரதான மேற்படி சந்தேக நபர்களாக கருதப்படும் தம்பதியினர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் கைது செய்யப்படும் வரை இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாமல் இருக்கப் போகிறது.

இது பெரும் அச்சத்தை யாழ்ப்பாண மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையும், கையில் வைத்திருப்பவர்களையும் கைது செய்யும் பொலிஸார். இதற்கு மூல காரணமாக இருக்கும் முதலைகளை ஒரு போதுமே கைது செய்யவில்லை. முதலைகளை எப்பொழுது கைது செய்கிறார்களோ அப்பொழுது தான் இந்த போதைப் பயன்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். இதனை பொலிஸார் செய்வார்களா?

அண்மைய பதிவுகள்