இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேசத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலக த்தில் இடம்பெற்றது.

4 months ago


யாழ்.இந்திய உதவித்துணைத் தூதர கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேசத்தில் 6 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று(15) ஊர்காவற்துறை பிரதேச செயலக த்தில் இடம்பெற்றது.

இந்த உபகரணங்களை கையளிப்பதற்காக இந்திய உதவித்துணைத் தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு குறித்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய உபகரணங்கள், சவர்க்காரம் திரவ சிறிய அளவிலான பொருள்களை கையளித்தார்.

இதில் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி சதீஸ்சன், மற்றும் யாழ் இந்திய உதவித்துணைத் தூதரகத்தின் உயர் அதிகாரி ராம் மகேஸ்,உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பெண் தலைமைத்துவ பெண்கள் பலரும் கலந்துகொண்டனர்.