மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.-- அரசாங்கம் அறிவிப்பு
மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பிள்னரே கொண்டுவரப்படும்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப் போதுமான கால அவகாசம் உள்ளது.
புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இந்தத் தருணம் வரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
புதிய அரசியலமைப்பை கொண்டுவர மூன்று வருடங்கள்வரை செல்லும்.
அதனால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முறை தொடர்பில் தமது சிபாரிகளை அனைவரும் முன்வைப்பார்கள்.
புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும்.
இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்த போதிய கால அவகாசம் உள்ளது.
மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்க வில்லை.
புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும் தருணத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தலாம்.
மாகாண சபை முறை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதுடன் குறைக்கவும்படாது. என்றார்.