இந்தியாவுடன் பணியாற்ற தயார், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் சீன அரசு அறிவிப்பு

3 weeks ago



இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கால் வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை கடுமையாகப் பாதித்திருந்தது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயும் முக்கிய பேச்சுவார்த்தைகள் எதுவும் பெரிய அளவில் இடம்பெறவில்லை.

அத்துடன், எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

இந்திய அரசாங்கம் சீனாவின் புகழ் பெற்ற செயலிகள் மற்றும் சில தயாரிப்புக்களைப் புறக்கணித்தது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் பனிப்போரொன்று நிலவி வந்தது.

எனினும் கால்வான் சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அது போன்ற சம்பவமொன்று மீண்டும் பதிவாகவில்லை.

பெரியதாக எந்த பிரச்சினையும் வெடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ பிரச்சினைக்குத் தீர்வுகாண தாம் முன்வந்துள்ளதாகவும், இது போன்ற விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் சீனாவின் மன மாற்றத்திற்கு வேறு காரணம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவும், சீனாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் விடுதலை அடைந்தன.

எனினும் உலகப் பொருளாதாரத்தில் சீனா முதலாவது இடத்திலும், இந்தியா 5 ஆவது இடத்திலும் உள்ளன.

குறிப்பாக இலத்திரனியல் உபகரணங்களின் உற்பத்தியில் சீனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த வளர்ச்சியானது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அந்நாடுகள் சீனாவின் தயாரிப்புகளை பாரிய அளவில் புறக்கணித்து வருகின்றன.

இதனையடுத்து உலக சந்தையில் சீன பொருள்களுக்கான கேள்வி கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து கொண்டு வருகின்றது.

எனவே தமது பொருளாதார சந்தையை மேலும் வலுப்படுத்தும் கட்டாயத்துக்கு சீன அரசு தள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவும், ஆபிரிக்காவும் சீன பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் அது சீனப் பொருளாதாரம் வலுவடைய போதாது என்பதே உண்மையாகும்.

இந்நிலையிலேயே சீனாவின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வயிைல் இதன் முதற்கட்டமாக இன்று இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் பெய்ஜிங்கில் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்லின் ஜியான் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவுடனான புரிதலை அதிகரிக்கவும், அதன் நலன்களை மதிக்கவும் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொடர் உரையாடல்கள் தான் இரு நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்தும் எனவும், வேறுபாடுகளை கலைந்து இரு நாட்டின் உறவுகளை சிறப்பாக்க தாம் தயாராக உள்ளதாகவும் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த அறிவிப்பு    இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமா அல்லது பாதகமான நிலையை ஏற்படுத்துமா என்பதில் பாரிய ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் இந்தியா நல்லுறவினைப் பேணி வருகின்றது. எனினும் சீனா தற்போது இந்தியா இணைந்து கொண்டால் சீனாவினை எதிர்க்கும் உலக நாடுகள் இந்தியாவையும் எதிர்க்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்