பாடசாலைகளிடையே குத்துச் சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றனர்

3 months ago


கண்டி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ குத்துச் சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஜூட் வசீகரன் டிவோன்சி 18 வயதுக்குட்பட்ட 60-65 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கத்தையும் முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவன் நாகேஸ்வரன் கோபிகன் 20 வயதுக்குட்பட்ட 70-75 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்று வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

குறித்த மாணவர்கள் பயிற்றுவிப்பாளர் தேசிந்தனின் பயிற்றுவிப்பில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த மாணவி இரத்தினபுரி      நியூ டவுன் உள்ளக                       விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ போட்டியில் 18 வயது பிரிவில் 59-63 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.