இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்

1 month ago



இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் ஓராண்டுக்கும் மேலாக இருதரப்புக்கும் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. 

இதன் பலனாக லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள், படிப்படியாக வெளியேறும் என்றும், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் மறுகட்டமைப்பை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் தெற்கு பகுதி பாதுகாப்பினை இராணுவம் உறுதி செய்யும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் லெபனான் நாட்டு இராணுவம் தெற்கு பகுதிக்கு செல்லவும், ஐ.நா- வின் 1701 தீர்மானத்தின் கீழ் அதன் பணியை மேற்கொள்ள தயாராகி வருவதாக கூறியுள்ளது.

போர் நிறுத்தம் காரணமாக தெற்கு லெபனான் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

கார்கள் அந்த நாட்டின் தெற்கு பகுதியை நோக்கி அணிவகுத்தவாறு உள்ளன.

இருப்பினும் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இஸ்ரேல் படைகள் உள்ளனர்.

அந்த கிராமங்களுக்கு மக்கள் திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.

அதே நேரத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் இதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் போர் நிறுத்த    ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறி செயல்பட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு எச்சரித்துள்ளார்.