முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டுபிடிப்பு

3 months ago





சுதந்திரபுரம் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போயுள்ளார்.

பின்னர் அவரைத் தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்த போதும், அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் நேற்று குறித்த இளைஞனது வீட்டு கிணற்றில் சடலம் மிதந்துள்ளது.

பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டது.

சுதந்திரபுரம் பகுதியினைச. சேர்ந்த பிலிப்குமார் டினோஜன் எனும் 28 வயதுடைய இளைஞரே மரணமடைந்துள்ளார்.

குறித்த இளைஞனின் மரணம் தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்