இணைந்த ஜனநாயக தமிழரசுக் கூட்டணி யாழ்.தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன், சட்டத்தரணி கே.வி தவராசா, பொ.ஜங்கரநேசன் ஆகியோர் இணைந்த ஜனநாயக தமிழரசுக் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 11 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், சட்டத்தரணி தவராசா, ஜங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகியன யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த குழுவால் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்தச் சுயேச்சைக் குழுவுக்கான வேட்பாளர்கள் வேட்புமனுவில் நேற்று வியாழக்கிழமை மாலை கையொப்பமிட்டுள்ளனர்.
இதில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஷ் உள்ளிட்ட 9 பேர் கையொப்பமிட்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.