விபத்தில் சிக்கிச் சிகிச்சை பெற்றுவந்த வவுனியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 week ago



விபத்தில் சிக்கிச் சிகிச்சை பெற்றுவந்த வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய, பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சசிகாந் (வயது -23) என்ற கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி நண்பரின் வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி இவர் விபத்துக்குள்ளாகி இருந்தார்.

இறப்பு விசாரணைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமாரால் நேற்று முன்னெடுக்கப்பட்டன.