விஷ ஜந்து கடிக்கு இலக்கானவருக்கு சிகிச்சை வழங்க சாவகச்சேரி மருத்துவமனையில் எவரும் இல்லை.
விஷ ஜந்து கடிக்கு இலக்கானவருக்கு சிகிச்சை வழங்க சாவகச்சேரி மருத்துவமனையில் எவரும் இல்லை.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில், நேற்றுமுன்தினம் இரவு மருத்துவத்துக்காகச் சென்ற போது, அங்கு மருத்துவர்களோ தாதியர்களோ இருக்கவில்லை என்று பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
திருநீலகண்டன் எனப்படும் பெரியளவிலான மட்டத்தேளின் (விஷஜந்துவின்) கடிக்கு உள்ளான தனது தந்தையை சாவகச்சேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாகவும், இதன்போது அங்கு மருத்துவர்களோ அல்லது தாதியர்களோ இல்லாத காரணத்தால் யாழ்ப்பா ணம் போதனா மருத்துவமனைக்குச் செல்லவேண்டி ஏற்பட்டதாகவும் நபரொருவர் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் சாவகச்சேரி மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-
மருத்துவமனையில் மருத்துவர்கள் இருக்கவில்லை என்பது தொடர்பாக கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தவறுகள் சரிசெய்யப்படும் - என்றார்.
சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் செல்லும் போது மருத்துவர்கள் நிற்பதில்லை என்றும், இதனால் பொது மக்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்து வமனைக்கு மாற்றப்படுகின்றனர் எனவும் சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பதில் பணிப்பாளர் மருத்துவர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியிருந்தது டன், சில நிர்வாகச் சீர்திருத் தங்களையும் முன்னெடுத்திருந்தார்.
அவருக்கு மக்களிடம் இருந்து பேராதரவு வழங்கப்பட்டது. எனினும், பின்னர் இடம்பெற்ற நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக, அர்ச்சுனா இடமாற்றம் செய்யப்பட்டதுடன், புதிய பதில் அத்தியட்சகராக மருத்துவர் ரஜீவ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.