தற்கொலை தீர்வல்ல

5 months ago


மற்றவரைப் பார்க்காதீர்கள் உங்களைப் பாருங்கள் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும். வாழ்க்கைப் பயணத்தில் எவரும் குறைந்தவர்கள் அல்ல. உங்களை விமர்சிக்க எவருக்கும் தகுதியில்லை. எவர் என்னவென்றாலும் சொல்லி விட்டுப் போகட்டும். உங்களுக்கு உதவப் போவதில்லை நீங்கள் தான் உங்களைப் பார்க்க வேண்டும்.

பெண்களின் தற்கொலை இன்று அதிகரித்து காணப்படுகிறது. தற்கொலை செய்யும் பெண்களுக்கு என்ன பிரச்சினை என்று இன்றுவரை அறியமுடியாமல் இருப்பது கவலை தரும் விடயமாகும். வெளியே சொல்ல முடியாமல் பெண்களிடம் பிரச்சினை இருக்கும் போது இதற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பது உண்மை.

பெண்கள் வெளியில் வருவது குறைவு, பெண்களின் மனம் இலகியது என்று சொல்வார்கள் அது அந்தக் காலம். இன்று பெண்கள் வெளியே வந்து விட்டார்கள். இன்று இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளைப் பார்க்கும் போது அந்தக் காலத்தில் பெண்களுக்கு பிரச்சினை குறைவு என்று தான் எண்ணத்தோன்றுகிறது.  

இன்று ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்று சொல்லும் காலத்தில இருக்கிறோம். அரச திணைக்களங்களில் அதிகாரிகளாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இருக்கும் போது பிரச்சினைகளும் அதிகமாக இருக்கிறது. இது வெட்கக் கேடான விடயமாகும்.

தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம்.

தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் உருவாகிறது? தற்கொலையில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது குறித்து மருத்துவர்கள் சொல்லும் போது

எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாய் பதிய வைக்கப்பட வேண்டும். தற்கொலைக்கான உளவியல் காரணங்கள் சில உள்ளன. அதன் முதன் நிலையானது கொலை செய்ய விரும்புவது. இரண்டாவது கொலை செய்யப்படுவதை விரும்புவது. மூன்றாவது தன்னையே கொலை செய்து கொள்வது. 

ஒருவர் மீது ஏற்படும் வெறுப்பில் அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் போது கொலையாக மாறுகிறது. அல்லது, நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் தற்கொலையை தேடிக் கொள்கின்றனர்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை நோக்கி மனிதர்கள் தங்களின் மனதை கொண்டு செல்வது கிடையாது. சில பெரிய தலையீடுகள் தற்கொலையை பெருமளவு தடுத்துள்ளன.

தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்க செய்தல் போன்றவற்றால் தற்கொலை மற்றும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

தற்கொலை எண்ணம் கொண்டோருடன் பேசி அதனைத் தடுக்கக்கூடிய உதவித் தொலைபேசி எண்களை உருவாக்குதல், தற்கொலை சார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிதல், நேர மேலாண்மை போன்றவற்றையும் குறிப்பிடலாம். தற்கொலையை முன்கூட்டியே கண்டறிவதற்காக கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், பொதுஇடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம். கூடுமானவரை தனிமையை தவிர்த்தல் நல்லது. 

தற்கொலை தடுப்புக் கொள்கைகள், திட்டங்களை அமல்படுத்தி, அத்துடன் பொதுமக்களின் பங்கேற்பை சேர்க்கும்போது, சிரமமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடலாம் என்று மக்கள் எண்ணுகிற போக்கை தலைகீழாக மாற்றலாம், தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

அரச திணைக்களங்களில் பெண்களுடன் பழகும் போது அதிகாரியாக இருந்தாலும் ஒரு லிமிட்டுடன் பழகுங்கள் நல்லது.


அண்மைய பதிவுகள்