அமெரிக்காவுக்கு எதிரான போருக்கு தயராக வேண்டும். அணு ஆயுத உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்று வடகொரிய ஜனாதிபதி தெரிவிப்பு.
அமெரிக்காவுக்கு எதிரான போருக்கு தயராக வேண்டும். அணு ஆயுத உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்று வடகொரிய ஜனாதிபதி தெரிவிப்பு.
அமெரிக்காவுக்கு எதிராக போருக்கு தயராக வேண்டும். போரில் அதிகளவான அணு ஆயுதங்களுக்கு தேவை இருக்கும் என்பதால் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா நிறுவப்பட்டதன் 76ஆவது ஆண்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவ அணிவகுப்பு மரியாதையை நிகழ்வில் ஏற்றுக் கொண்ட அவர், "அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது.
இதனால் அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். போரில்
அதிகளவிலான அணு ஆயுதங்க ளுக்கு தேவை இருக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" என்று கூறினார்.
வடகொரியா ஏற்கனவே தென்கொரியாவை எதிரி நாடாக அறிவித்து எந்த நேரத்திலும் போருக்கு தயாராக இருக்கும் படி தனது இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தென்கொரியா, ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அந்த நாடு அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.
இதற்கு பதிலடியாக தென் கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே வடகொரியா ஜனாதிபதி அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக உரை யாற்றியுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது