பிலிப்பைன்ஸில் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. இதேவேளை, 6 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்றது. "கெமி" என பெயரிடப்பட்ட இந்தப் புயல் கிழக்கு தாய்வானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள் ளது.
இதனைத் தொடர்ந்து பிலிப் பைன்ஸில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள கரையோர மாவட்டங்களில் இடி,மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் சின்னா பின்னமாகின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதில் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின் கம்பங்கள், மரங்கள் என்பன சூறைக்காற்றில் சிக்கி சாய்ந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் இருந்த 6 இலட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து சேவை இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய வர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, பிலிப்பைன்ஸில் கனமழைக்கு 13 பேர் உயி ரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது.