தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க கல்வியமைச்சு தீர்மானம்.

5 months ago


தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்றும், புதிய மாணவர்களுக்கான உதவித்தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றதாகவும், ஆனால் இதுவரையில் அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அண்மைய பதிவுகள்