சீனாவில் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கேமி சூறாவளி வீசியது. சூறாவளியின் எதிரொலியாக, கனமழையும் கொட்டித் தீர்க்க, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், 65,000 நிலச்சரிவுகளில் அந்நகரமே நிலைகுலைந்துள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால், 23,419 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மழையில் சிக்கி 50 பேர் பலியாகி இருப்பதோடு, 15 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம், தகவல் தொடர்பு, குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.