இணையவழி குற்றங்கள் தொடர்பில் 09 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு.-- இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவிப்பு

2 months ago


இணையவழி குற்றங்கள் தொடர்பில் 09 ஆயிரம்              முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின்              பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்-

2024 ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவ்வகையான குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில், 80 வீதமான              முறைப்பாடுகள் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவவை.

இவற்றில் இணையவழி மோசடி தொடர்பில் 1,400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

85 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை.

நாற்பது முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவை.

இணையவழி ஊடாக பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது-என்றார்.


அண்மைய பதிவுகள்