மொண்ட்ரீலுக்கு வடக்கே உள்ள ராவ்டோன், கியூவில் வசிப்பவர்கள், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நத்தைகள் அதிகரித்து வருவதைக் கவனித்துள்ளனர்.
அவை சீன மர்ம நத்தைகள் (சிபாங்கோபாலுடினா சினென்சிஸ் - Cipangopaludina chinensis) என்று அழைக்கப்படுகின்றன.
அவை நன்னீர் ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகளில் ஆபத்தான விகிதத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.
”இங்கே நத்தைகளைப் பார்க்க முடிகிறது. ஏனென்றால் அடிப்பகுதி மணல் நிறைந்தது." என்று அழகிய பிரென்னன் ஏரியின் கரையில் இருந்து ராவ்டன் குடியிருப்பாளர் மைக்கேல் மெக்ஆர்டில் கூறினார். "ஒவ்வொரு நத்தையிலும் 150க்கும் மேற்பட்ட குட்டிகள் இருக்கலாம்." என்றார் அவர்.
இந்த நத்தைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதாகவும், குடியிருப்பாளர்கள் அவற்றை மிதிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
""இங்குள்ள ஆமைகள் இப்போது நம்பமுடியாத அளவிற்கு ஏராளமாக உள்ளன. நான் அவற்றைப் பார்த் திருக்கிறேன். அவை நத்தைகளை சாப்பிடுகின்றன." என்று மெக்ஆர்டில் கூறினார். "ரக்கூன்கள் மற்றும் நீர் நாய்கள் கூட அவற்றை சாப்பிட விரும்புகின்றன. மேலும் வசந்த காலத்தில், எங்கள் கடற்கரையின் நத்தைகளின் பெருமளவிலான வெற்று ஓடுகளை நாம் காண்கின்றோம். ஏனென்றால் உண்மையில் பிற பிராணிகள் வந்து அவற்றைச் சாப்பிடுகின்றன."- என்றார்.
நகராட்சி இந்தப் பிரச்சினையை நன்கு அறிந்துள்ளது. மேலும் நத்தைகளை சுத்தம் செய்ய ஓர் உள்ளூர் அமைப்பை அது ஈடுபடுத்தியுள்ளது.
"நாங்கள் அந்த நத்தைகளுடன் வாழப் போகிறோம்" என்று ராவ்டன் மேயர் ரேமண்ட் ரூகோ கூறினார். "அவற்றை ஒழிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.ஆனால் விஷயம் என்னவென்றால், அவற்றின் பெருக்கத்தை -தொகையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்" என்றார் அவர்.
இருப்பினும், நத்தைகள் ஒரு ஏரியில் மட்டும் இல்லை. கியூபெக் மாகாணம் முழுவதும் பல பிராந்தியங்களில் அவை பரவி இருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. சீன மர்ம நத்தை தனது சமூகத்தில் உள்ள பல ஏரி களில் வாழ்ந்து வருவதாக ரூஜியோ கூறுகிறார்.
"அப்புறம் ஏரிக்கு நேர் எதிரே. நீங்கள் பார்க்கிறீர்கள், அங்கே ஒரு கடற்கரை இருக்கிறது. அங்கும் அது பரவியுள்ளது. ஓரிரு நாட்களில் அவர்கள் 2,000 நத்தைகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனர் என நான் கேள்விப்பட்டேன்" என்று ரூஜியோ கூறினார்.
டினா ஷ்மெல்லர் தண்ணீருக்கு அருகில் ஒரு குடிலை வைத்திருக்கிறார். "2024 இல் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வழியில் அவற்றைப் பார்க்காமல் சில அடிகள் கூட நடக்க முடியாது" என்றாள். "அவற்றின் ஓடுகள் மிகவும் தடிமனாக உள்ளன. அவை உங்களை நிச்சயமாக வெட்டக்கூடும்."- என்றும் அவள் எச்சரித்தாள்.