பொதுப் போக்குவரத்தை இலகுபடுத்த ஆளுநரால் முடியவில்லை.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். இங்கே சுவர் இருக்கிறது சித்திரம் வரைய முடியவில்லை என்றால் சித்திரம் வரைவதற்கு ஏதோ தடைகள் இருக்கிறது. தடைகள் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியாது. அப்ப யாரோ தடைகளை ஏற்படுத்துகிறார்கள். இதற்குள் தான் வில்லங்கம் இருக்கிறது.

அதேபோல் தான் பஸ் இருந்தும் ஓட முடியாத சூழலில் பல வருடங்களாக ஒரே இடத்தில் பஸ் தரித்து நிற்கிறது. சொத்து முடங்கிப் போயிருப்பதாக பஸ் உரிமையாளர் கவலை அடைகிறார். பஸ்சை எப்படியாவது ஓட வைக்கனும் என்று கொழும்பு சென்றால் வடக்கில தான் சம்பந்தப்பட்ட டிப்பாட்மெண்ட் இருக்கிறது. அங்கே அனுமதியைப் பெறலாம் என்று சொன்னார்கள்.

வடக்கில சம்பந்தப்பட்ட திணைக்களம் எல்லாம் இருக்குது ஆனால் வேலைக்காகனுமே, ஆளுநர் அலுவலகம் வரை சென்றும் இதுவரை பயன் கிடைக்கவில்லை.

எத்தனை பிரதேசங்களில் போக்குவரத்துக்கு பஸ் இல்லாமல் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பல முறை ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

வடக்கில மக்கள் போக்குவரத்துக்கு பஸ்கள் தேவையாகவுள்ள நிலையில் பஸ் வைத்திருப்பவர்களுக்கு பாதையைக் கொடுத்து மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்த அதிகாரிகளுக்கு மனம் இல்லை போலும். அல்லது ஏதாவது எதிர்பார்க்கிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது.

அதிகாரிகள் வேலையைச் செய்கிறார்கள் இல்லை என்று செய்தி போட்டால் பொலிஸாரைக் கொண்டு ஊடகவியலாளரை, ஊடக நிறுவனத்தை மிரட்டுவது அழகல்ல. தமது வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் அதற்காகத் தான் அரசு சம்பளம் தருகிறது.

கொக்குவிலைச் சேர்ந்த பஸ் உரிமையாளர் பல வருடங்களாக பொது போக்குவரத்தை மேற்கொள்வதற்கு பஸ்ஸிற்கான பாதை அனுமதியைக் கேட்டு ஆளுநர் அலுவலகத்திற்கு அலைகிறார். ஆளுநர் மாற்றங்கள் தான் நிகழ்கிறது ஆனால் இந்த பஸ் உரிமையாளருக்கு விமோசனம் கிடைக்கவில்லை.

பல இலட்சம் பணத்தை செலுத்தி பொதுப் போக்குவரத்துக்கான பஸ் பாதை அனுமதியை எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவரிடம் அவ்வளவு பணம் கிடையாது. பணம் இல்லாமல் பொதுப் போக்குவரத்துக்கான பாதை அனுமதியை எடுக்க முடியாதா? இவருக்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் ஆயின் பஸ் இல்லாத பிரதேசங்களுக்கு பஸ்ஸை விடலாம் தானே.

சில பிரதேசங்களில் கூடுதலாக வன்னிப் பிரதேசங்களில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் குறைவு என்பது சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தெரியும். தெரிந்தும் பஸ் ஒன்றினை வைத்திருப்பவருக்கு அந்த இடத்தில் பஸ்ஸை ஒடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

பஸ் இல்லாத பிரதேசம் அபிவிருத்தியில் பின்நோக்கி செல்லும் என்பது கண்கூடு. இதற்குப் பொறுப்பான திணைக்களம் பதில் சொல்ல வேண்டும். ஒரு பஸ்ஸை வைத்துக்கொண்டு அவர் பல வருடங்கள் சம்பந்தப்பட்ட திணைக்களமும் வீடுமாக அலைகிறார். எவருமே கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

போக்குவரத்து சபை சாரதிகள் நடத்துநர்கள் தனியார் பஸ் சாரதி நடத்துநர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் சீரான முறையில் போக்குவரத்தை மேற் கொள்வதாக இருந்தால் முதலில் பிரச்சினையை தீர்க்கவும். இதனால் பல பிரச்சினைக்கு சாரதிகள் முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் தனியார், அரச பஸ் சேர்ந்து போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். ஒரு பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால் பல பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பது வடக்கில் ஏற்படும் பிரச்சினை வெளிக்காட்டி இருக்கிறது. சேர்ந்து பயணித்தால் பிரச்சினை வரும் என்று தொழிற்சங்கங்களே முதலே முடிவு செய்கின்றனர்.

இப்படியாக பிரச்சினை எழும் போது பஸ் வைத்திருப்பவர்கள் புதிதாக பொதுப் போக்குவரத்தை மேற்கொள்ள பாதை அனுமதியை எடுக்க முடியாது. பொதுப் போக்குவரத்தை சீராக செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை தயாரில்லை என்பது தெரிகிறது.

அண்மைய பதிவுகள்