யாழ்.மானிப்பாயில் வீட்டில் தேநீர் அருந்திக் திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
1 month ago
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக் திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
மானிப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் சஜிந்தன் (வயது-32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்றார்.
இந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.