தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பாராளுமன்றம் 3 மாத விடுமுறை அளித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து, கஜேந்திரகுமாருக்கு ஜூலை 2ஆம் திகதியிலிருந்து 3 மாத விடுமுறை வழங்க எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிந்தார்.
இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் வழி மொழிந்தார்.
இதையடுத்து, கஜேந்திரகுமாருக்கு 3 மாத கால விடுமுறை அளிக்க சபை இணக்கம் அளித்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் வெளி நாடொன்றில் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.