அமெரிக்க பாராளுமன்றத்துக்கு, விர்ஜீனியாவில் இருந்து தெரிவான சுஹாஷ் சுப்பிரமணியம், பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம்
3 months ago

அமெரிக்க பாராளுமன்றத்துக்கு, விர்ஜீனியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுஹாஷ் சுப்பிரமணியம், பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடந்து முடிந்தது.
இதில், பெரும்பான்மையான இடங்களை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது.
ட்ரம்ப் எதிர்வரும் 20ஆம் திகதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதில், கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுத்த முதல் இந்திய - அமெரிக்கப் பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்பிர மணியம் பெற்றுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
