புதுடில்லியில் கடந்த திங்கள்கிழமை பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

2 months ago



புதுடில்லியில் கடந்த திங்கள்கிழமை டில்லிப் பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையும், ஆஸ்திரேலிய தமிழர் பேரவையும் இணைந்து ஒருங்கிணைத்த "இலங்கைத் தமிழர்கள் மற்றும் காஷ்மிர் பண்டிட்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் உயிர்பிழைத்தலின் பாலினம் சார்ந்த பெருங்கதையாடல்கள்" எனும் பொருண்மையிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்வில், கருத்தரங்குக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.

கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். தி. உமாதேவி, ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் தலைவர் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, அமெரிக்கத் தமிழர் செயற்பாட்டுக் குழுவின் செயலாளர் சுந்தர் குப்புசாமி, தமிழர் புலம்பெயர் அமைப்புகளின் இந்திய ஒருங்கிணைப்பாளர் கதிரவன், கலைப்புலத் தலைவர் பேராசிரியர் அமிதாவ சக்ரபார்த்தி, அதிதி மகாவித்யாலயா கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மம்தா சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த பன்னாட்டு கருத்தரங்கில், புலம்பெயர்வு, அடையாள இழப்பு, அகதிகள் மறுவாழ்வு முகாம், போருக்குப் பின்னான மன உளைச்சல், பாலினம் - அதிகாரம் -ஒடுக்கு முறை, கட்டாயப்படுத்தப்பட்ட புலம்பெயர்வின் பொருளாதார விளைவுகள் போன்ற கருப்பொருள்களில் 42 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.