பெலியத்தை தேர்தல் தொகுதியான தனது சொந்த தொகுதியிலேயே நாமல் ராஜபக்ஷ படுதோல்வியடைந்துள்ளார்.
6 months ago

நாமல் ராஜபக்ஷவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படு தோல்வியடைந்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் தொகுதியும், ராஜபக்ஷ குடும்பத்தின் பரம்பரை தொகுதியுமான பெலியத்தையில் அநுரகுமார திசாநாயக்க பாரிய வெற்றியீட்டியுள்ளார்.
அவர் 34,320 வாக்குகளைப் பெற்று 53.43 வீத வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சஜித் பிரேமதாச 16,820 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 5,460 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
வெறுமனே 5385 வாக்குகளுடன் நாமல் தனது சொந்தத் தேர்தல் தொகுதியில் நான்காவது இடத்தைப் பிடித்து படுதோல்வியடைந்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
