நடுக்கடலில் மயங்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரை நாகையைச் சேர்ந்த மீனவர்கள் மீட்டனர்.

5 months ago


நடுக்கடலில் மயங்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட  நிலையில் இருந்த இலங்கை மீனவரை நாகையைச் சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகை, அக்கரை பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 9 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி மதியம் 12 மணி அளவில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கையைச் சேர்ந்த ஒரு பைபர் படகில் மீனவர் ஒருவர் மயங்கிய நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரை படகுடன் பத்திரமாக மீட்டு இன்று காலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். 

அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்மைய பதிவுகள்