தமிழ் மக்களின் தெரிவு ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும்! குருக்கள் துறவியர் ஒன்றியம் சுட்டிக்காட்டு.
ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்க ளின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என நம்புவதாக, வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள, பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரசார 15 மேடைகளை அலங்கரிக்கிறார்கள் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஒன்றியத்தின் சார்பாக அருட்பணி சி.ஜி.ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்-
ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக் கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறம் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இம் முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை- என குறிப்பிடப்பட்டுள்ளது.