யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக உள நல நாளையொட்டிய சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வுகள் நேற்றுப் புதன்கிழமை காலை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றன.
ஆரம்பக் கல்வி நெறி ஆசிரிய மாணவி ஜெ. சுலோச்சனாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக யாழ். பல்கலைக்கழக உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க. கஜவிந்தன் கலந்து கொண்டு "எண்ணங்களின் வலிமை" என்ற பொருளில் உரையாற்றினார்.
கலாசாலையின் பிரதி அதிபர் க. செந்தில்குமரன் விருந்தினர் அறிமுகவுரையையும் ஆரம்பக் கல்வி ஆசிரிய மாணவன் சி. டனிஸ்ரன் உளநல நாள் என்ற பொருளிலான உரையையும் ஆற்றினர்.
கலாசாலை அதிபர் சந்திர மெளலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.
கலாநிதி க. கஜவிந்தன் தான் எழுதிய நூல்களின் ஒரு தொகுதியை நூலக பொறுப்பு விரிவுரையாளர் வேலும் மயிலும் சேந்தனிடம் கையளித்தார்.