கனடாவுக்கு Visitor visa வில் வந்துள் ளவர்கள், இனி கனடாவிலிருந்த வண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது.
கனடாவுக்கு Visitor visa வில் வந்துள் ளவர்கள், இனி கனடாவிலிருந்த வண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது.
2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, கனடாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும் பிச் செல்ல முடியாத நிலை நிலவி யதால், அவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் பணி செய்ய பணி அனுமதி வழங்க அரசு ஆவன செய்தது.
ஆனால், அந்த விதி, நேற்றுடன், அதாவது, ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
அதாவது, visitor visa பெற்று கனடா வில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் கள் இனி கனடாவில் பணி அனும திக்கு விண்ணப்பிக்க முடியாது.
விடயம் என்னவென்றால், visitor visa பெற்று கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்தான் காலாவதியாக இருந்தது.
ஆனால், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கி யிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, கனடா புலம்பெயர்தல், அகதி கள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அந்த திட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.