நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவிப்பு.

3 months ago


நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும்,             பறங்கியராக இருந்தாலும், மலாயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் "நாம் இலங்கைப் பிரஜைகள்" என்று பெருமையுடன் வாழக்கூடிய நடை முறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை இந்த நாடு தோல்வியடையுமே தவிர, வெற்றியடையாது.

அதற்காக அரசமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீர மைப்புகளை மேற்கொள்ள ஒருபோதும் நாம் பின்வாங்க    மாட்டோம் என்றும் கூறினார்.

அவர் நேற்று புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சு நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம்.

அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.

எமக்கு அதிகாரத்தை    கையளிக்கையில் "மாற்றம்" ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது.

மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்து விதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும்.

தற்போது அது நிரூபணமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து விதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்கு பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.

தனது இனம், தனது மதம். தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத் தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.

இந்த அனைத்து     நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான     செயல்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய் துள்ளோம்.

பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில், எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்.

சட்டத்தை மதிக்கும் நாட்டை           உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம்.

எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம்.

பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கி செல்லும் அரச சேவையை உருவாக்குவோம்.

செயற்திறன் மிக்க, நேர்மையான மற்றும் ஜனரஞ்சகமான அரச சேவையை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.

மக்கள்மீது ஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு. நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம்.

இந்த நாட்டின் பிரஜைகளுக்கு "நான் இலங்கையர்" என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்.

இந்த நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும் வகையில் இந்த நாட்டை உருவாக்குவது அவசியம்.

அதற்கு உங்களின் கூட்டுப் பங்களிப்பு தேவை. 

உங்களுடைய விமர்சனங்களை பொருத்தமான தருணத்தில் ஏற்றுக் கொள்வேன்.

அதேபோல் நாங்கள்       கட்டியெழுப்ப போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக உங்களை வலுவூட்டுவோம்.

எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை கலைய முடியுமானால், நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அதன் ஊடாக நாடு முகங்கொடுத் துள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ளவும் அதன் ஊடாக முன்னோக்சிச் செல்வதற்குத் தேவையான மூலோபாயங்களை இணைந்து திட்டமிடவும் முடியும்.

இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும் நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன.

மக்களின் ஆணைக்கு அமைவான பாராளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது.

இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன்.

அரசமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்துக்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன்.

அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்!

ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதை யும் நானும் அறிவேன்.

சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடி யாமல் உள்ளது..!

இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம் - என்றார்.