இலங்கை, இந்திய மீனவர்கள் செயற்குழுவை உருவாக்க வேண்டும் - தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்து

6 months ago

இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பான இணைந்த செயல்குழுவை மீண்டும் உருவாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில், 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்தமைக்காக கைது செய்யப்பட்டனர்.

அவர்களையும் ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி, மு. க. ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தில் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனால் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இணைந்த செயல்குழுவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

அண்மைய பதிவுகள்