கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா பணியகம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, சாலை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, முன்பள்ளி கல்வி பணியகம் ஆகிய 5 அதிகார சபைகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நேற்று முன்தினம் தனது பணிமனையில் வைத்து வழங்கினார்.
மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக ஜி.சுகுமாறன், மாகாண சுற்றுலா பணியக தலைவராக எம். ஜி. பிரியந்த மலவனகே, மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக திருமதி. ரஜினி கணேசபிள்ளை, மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவராக கித்சிறி நவரத்ன, மாகாண முன்பள்ளி கல்வி பணியக தலைவராக அ. விஜயானந்தமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களை ஆளுநர் வழங்கி வைத்தார்.