வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுவை விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவில் இருந்த எமில்காந்தன் தாக்கல் செய்தார்.

2 months ago



எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமில்காந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் குழு சுயேச்சையாக போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் நேற்று காலை வேட்புமனுவை அவர்கள் தாக்கல் செய்தனர்.

எமில்காந்தன் முன்னர் விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவில் பணியாற்றியிருந்தார்.

இதனால் அவரை இலங்கை அரசு முன்னர் கறுப்புப் பட்டியலில் இணைத்திருந்தது.

ஆயினும் அவரது பெயர் கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்