போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு

5 months ago


சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க அமைச்ச ரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, சம்பள உயர்வு தரம் 3(ஐ) இல் உள்ள ஆசிரியர்களுக்கு 525 ரூபாய். தரம் 2(ஐ) இல் உள்ள ஆசிரியர்களுக்கு 1,335 ரூபாய், தரம் 1 இல் உள்ளவர்களுக்கு 1,630 ரூபாயும் வழங்கப்படவுள்ளன.

இந்த சம்பள உயர்வு அவர்களின் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படாது. சுகயீன விடுமுறை போராட்டத்தின்போது பணியில் இருந்த அனைவருக்கும் இதே அதிக ரிப்பு வழங்கப்படும் - என்றும் அமைச் சர் கூறினார்.

இதேவேளை, கடந்த 8, 9ஆம் திகதி களில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடாத அரச அதிகாரிகளுக்கும் விசேட சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அண்மைய பதிவுகள்