ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு உத்தேசம்- தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு.
ஜனாதிபதித் தேர்தல் முடிவ டைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு உத்தேசிக் கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப் படுமாயின், அதுகுறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத னிடையே 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்
தல்கள் பிற்போடப்பட்டதால் வாக்காளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து வதற்கு தேர்தல்கள் ஆணைக் குழு நடவடிக்கை எடுக்கவேண் டும் எனவும் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்தப் பின்னணியில் இது பற்றிக் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சிமன்றத் தேர் தல்களை நடத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசித்துவரு
கிறது. தற்போதுவரை அதில் (தேர்தலை நடத்துவதில்) எவ் வித தடங்கல்களும் இல்லை.
எனினும், ஜனாதிபதித் தேர் தலின் பின்னர் புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி உட னடியாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் பட்சத்தில், அடுத்த தாக பாராளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியிருக்கும். அவ்வாறானதொரு சந்தர்ப் பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும்
இருப்பினும், அத்தகைய சூழ்நிலையில் முதலில் பாராளு மன்றத் தேர்தலையும் தாமத மின்றி அடுத்ததாக உள்ளூ ராட்சிமன்றத் தேர்தலையும் நடத்துவது குறித்து ஆணைக் குழு தற்போது ஆராய்ந்து வரு கிறது.