சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவிப்பு

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 200 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அதிகாரப் பூர்வமற்ற தரவுகளின்படி, கடந்த ஆண்டு 270 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை அனைத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.
சமூக ஊட கங்களை தடை செய்வதே இவற்றை தடுக்க எம்மால் இயன்ற முதலாவது செயற்பாடாகும்.
ஒரு நாடாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் அல்லது இரண்டு வாரங்களில் இது குறித்த தகவல்களை வெளியிட எதிர்பார்க்கிறோம்.
குழந்தைகளுக்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன.
இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கலாம் என எதிர்பார்க்கிறோம்-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
