நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் பலமுறை தலையிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
நெதர்லாந்து பிரதமர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளார்.
இஸ்ரேலியர்களிற்கு எதிரான மோசமான வன்முறையை தொடர்ந்து நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
பெருமளவு பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும் இஸ்ரேலியர்கள் தாக்கப்பட்டனர் என ஆம்ஸ்டெர்டாம் மேயரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய லீக் போட்டிகளிற்காக இஸ்ரேலின் மக்காபி டெல் அவியின் இரசிகர்கள் நெதர்லாந்திற்கு சென்றிருந்தனர்.