கடுவெல - கொரதொட்ட பகுதியில் புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயல்பட்ட ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 months ago

கடுவெல - கொரதொட்ட பகுதியில் புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயல்பட்ட ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கைவரு முத்து என்றும் பாதுகாப்பு படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாகவும் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.