யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்று யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு விடுதலைக்காய் தமது மூன்று பிள்ளைகளைக் கொடுத்த தாயார் ஒருவர் பிரதான சுடரினை எற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தவத்திரு வேலன் சுவாமிகள் சுடரினை ஏற்றிவைத்தார்.
அத்துடன் ஏனைய பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தினர்...