இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நல்லிணக்க செயற்பாடுகள் நிதி குற்றங்களை ஆராய்வதற்காக அரசு குழுக்களை நியமிக்கவுள்ளது.

2 months ago



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நல்லிணக்க செயற்பாடுகள் நிதி குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் மூன்று உயர்மட்ட குழுக்களை நியமிக்கவுள்ளது.

பொதுத் தேர்தலிற்கு முன்னதாக இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒழுக்காற்று அடிப்படையிலான ஆட்சி ஊழல் வீண்விரயம் போன்றவற்றிற்கு தீர்வைக் காணுதல் போன்ற ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறலிற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள் பொறுப்புக்கூறல் நல்லிணக்க விடயத்திற்கு தீர்வைக் காணக்கூடிய திறமையான நபர்கள் எங்களிடம் உள்ளனர் என அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பெருமளவு மக்களின் துயரங்கள் குறித்து நாங்கள் அறிவோம், நாங்கள் அவர்களிற்கு நீதியை வழங்குவோம் என தெரிவித்துள்ள அரசாங்க வட்டாரங்கள் நம்பகதன்மை மிக்க உண்மை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளன.

இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ள பொறுப்புக்கூறல் சம்பவங்களின் எண்ணிக்கையை அறிவதற்கான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர் எனவும் அவை தெரிவித்துள்ளன.

இதேவேளை குழுவொன்று ஊழல் களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து இழக்கப்பட்ட பொதுமக்களின் வரிப்பணத்தை மீட்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய கோணத்தில் ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்படும், இதற்காக விசேட குழுவை தெரிவு செய்துள்ளோம், பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படும் என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.


அண்மைய பதிவுகள்