இலங்கையுடனான நிதி வசதிகள் ஒப்பந்தத்தின் மீளாய்வில் எட்டப்பட்ட பணிக்குழாம் மட்ட இணக்கம் தொடர்பில் IMF ஆராயவுள்ளது.

2 weeks ago



இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதிகள் ஒப்பந்தத்தின் மூன்றாம் மீளாய்வின் போது எட்டப்பட்ட பணிக்குழாம் மட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.

இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, எதிர்வரும் மாதங்களில் கூடவிருப்பதாக, அதன் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றுக் குழு அதற்கான அனுமதியை வழங்கிய உடன், இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு வரி சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அண்மையில் நாடாளுமன்றில் வைத்து அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் வைத்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய ஜலி கோசெக், இந்த விடயங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையில் முன்வைக்கப்படவுள்ள மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்படும் என்று தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்