நாடுகளுக்காக நியமிக்கப்படும் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு இலக்குகள் நிர்ணயம் அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்தார்.

2 months ago



நாடுகளுக்காக நியமிக்கப்படும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு குறிப்பிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்தார்.

அரசியல் தொடர்புகள் மற்றும் குடும்ப உறவுகளின் அடிப்படையில் இராஜதந்திர சேவைக்கு அதிகாரிகளை நியமிக்கும் முறை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெர்மன் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர் குழுவின் ஆட்சேர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இதனைத் தெரிவித்தார்.