தொழில் தமிழகம் தலைசிறந்த மாநிலம் என மத்திய அரசு உறுதிப்படுத்தியது.- தமிழக அரசு பெருமிதம் தெரிவிப்பு

3 months ago


தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதுடன், 1.39 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் தலைசிறந்த மாநிலம் என மத்திய அரசின் புள்ளியியல் துறை ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தவை வருமாறு,

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி தொடங்கிய பிறகு, 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்ற இலக்குடன் தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு, தொழில்                   முதலீடுகளை ஈர்க்கும் பணி தொடங்கப்பட்டது.

தி. மு. க. அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன. இதை மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்