
இலங்கை புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் 6 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
அந்த சங்கத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 13 மாதங்களில் 53 இலட்சம் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சங்கத்தால் ஆவணங்கள் சரியான முறையில் பேணப்படாத நிலையில் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பணிமனையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
