இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும்.
26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாள்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் இணைந்து இதனை நடை முறைப்படுத்துகின்றன.
வனாத்தவில்லு ஆற்றின் வாடி, வனாத்தவில்லு களப்பு தீவு, கல்பிட்டி குடா, கல்பிட்டி வைகால, நீர்கொழும்பு தடாகம், நீர்கொழும்பு கபுங்கொட, வத்தளை பிரிதிபுர, பெந்தோட்ட கடற் கரை, ஹபராதுவ கொக்கல லகூன், திக்வெல்ல சீதாகால்ல, தங்கல்ல ரெகவ லகூன், அம்பலாங்கொடை லூனம் லகூன், ஹம்பாந்தோட்டை மலல லேயாவ, திஸ்ஸமஹாராம கிரிந்த வெலி மலை லாஹூகல குனுக்கல
கடற்கரை, பொத்துவில் எலிபெண்ட் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவி ருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாள்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீட மைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் இணைந்து இதனை நடை முறைப்படுத்துகின்றன.
வனாத்தவில்லு ஆற்றின் வாடி, வனாத்தவில்லு களப்பு தீவு, கல்பிட்டி குடா, கல்பிட்டி வைகால, நீர்கொழும்பு தடாகம், நீர்கொழும்பு கபுங்கொட, வத்தளை பிரிதிபுர, பெந்தோட்ட கடற் கரை, ஹபராதுவ கொக்கல லகூன், திக்வெல்ல சீதாகால்ல, தங்கல்ல ரெகவ லகூன், அம்பலாங்கொடை லூனம் லகூன், ஹம்பாந்தோட்டை மலல லேயாவ, திஸ்ஸமஹாராம கிரிந்த வெலி மலை லாஹூகல குனுக்கலரொக், மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு சல்லதீவு, கிண்ணியா தம்பலக முவ குடா, திருகோணமலை ஆளுநரின் அலுவலகப் பகுதி, திருகோணமலை உப்புவெளி, திருகோணமலை சம்பல் தீவு. குச்சிவெளி அரிசிமலை முல்லைத் தீவு நாயாறு குடா, முல்லைத்தீவு நந்திக் கடல் குடா, யாழ்ப்பாணம் சென்னக் குளம் கடற்கரை, யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரைஆகிய கரையோரப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள் ளன.
கடலோர சுற்றுச்சூழலைப் பாது காக்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வருடம் இரணைவில, உப்பாறு, கீரிமுண்டலம், மூதூர், காரைதீவு, நிந்தவூர், புஸ்ஸ, தல்தியவத்தை, கொக்கல, சாய்ந்தமருது, மாளிகைக் காடு,காத்தான்குடி, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய கரையோரங்களில் 14 அவசர கால கரையோர பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றம்..
அபிவிருத்திப் பணிகளுக்காக 520 மின் அனுமதிப் பத்திரங்களும் வழங் கப்பட்டுள்ளன. இவ்வருடம் 30 கடற் கரை துப்புரவு வேலைத் திட்டங்களும் 04 சதுப்புநிலத் தாவரங்கள் நடுகை வேலைத் திட்டங்களும் முன்னெடுக் கப்பட்டுள்ளன என்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரி வித்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் 11 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. களுத்துறை கலிடோ, லுனாவ, வடக்கு உடப்பு, நிந்தவூர், சாய்ந்தமருது, மூதூர், மெடிஹ, முதுக டுவ, கங்கவ, இரணைவில மற்றும் பண்டாரமுல்ல ஆகிய பிரதேசங்களில் இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.