17 வயது இலங்கை- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரி வீரர் ஆகாஷ், 27 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

1 month ago



இலங்கை அணி 17 வயதுக்குட்பட்டோர் அணிக்கும் பங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்டோர் அணிக்குமிடையிலான இன்றைய போட்டியிலேயே யாழ் ஹார்ட்லி கல்லூரி வீரர் ஆகாஷ், 27 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பங்களாதேஷ் அணியை 141 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இலங்கை 17 வயதின் கீழ் அணியில் யாழ்.ஹாட்லி கல்லூரியின் சுழல் பந்துவீச்சாளர் விக்னேஷ்வரன் ஆகாஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

ஆகாஸ் மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் தம்புள்ள அணிக்காக விளையாடி பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ்பேசும் வீரராக ஆகாஸ் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதுடன், அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரியின் வீரர் கித்ம விதான பத்திரன மற்றும் உப தலைவராக சென். ஜோசப் கல்லூரியின் செனுஜ வெகுங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் 17 வயதின் கீழ் அணி மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் டிசம்பர் 8ம் திகதி நிறைவடையவுள்ளது.