சமூகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும், மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - இலங்கை அரசுக்கு ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி வலியுறுத்து.

4 months ago


இலங்கையின் ஆட்சி நிர்வாகம் என நோக்குகையில் நாட்டுமக்கள் நம் பிக்கை வைக்கக்கூடிய சமூகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற் கும், மீளக்கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஐக்கிய நாடுகள் அபி விருத்தி செயற்றிட்டத்தின் இலங் கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா வலியுறுத்தி யுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- அனைவரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக் கூறலை உறுதி செய்யக் கூடியதுமான செயன்முறையாக நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே மறுசீரமைப்புகளின் மையப் புள்ளியாக அமைய வேண்டும். நிதியியல் கொள்கைத் தீர்மானங்கள் வரிவருமான வீழ்ச்சிக்கும், மிக உயர்வான பொதுத்துறை செலவினங் களுக்கும், ஏற்றுமதிகளின் சுருக் கத்துக்கும், கடன் ஸ்திரத்தன்மை சீர்குலைவுக்கும் வழிவகுத்ததுடன், நாட்டை பெரும் பின்னடைவுக்குள் தள்ளியது. எனவே அந்த நெருக்கடிக்குள் மீண்டும் சிக்குவதைத் தடுப்பதற்கு ஆட்சி நிர்வாகத்துடன் தொடர்புடைய சில சவால்களில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அதேபோன்று வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - என்றார்.

அண்மைய பதிவுகள்